தளபதி விஜய் 46வது பிறந்தநாளில் ’மாஸ்டர்’ பட புதுபோஸ்டர்.. கொளுத்துங்கடா…

விஜய்க்கு இன்று 46வது பிறந்த தினம். அவர் நடித்துள்ள 64வது படமான மாஸ்டர் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்ப தால் ஊரடங்கு முடுந்ததும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் விஜய் பிறந்ததினத்தை யொட்டி ’மாஸ்டர்’ படத்தின் புதிய போஸ்டரை பட நிறுவனம் வெளியிட் டுள்ளது. அதில் விஜய்க்கு ஹேப்பி பர்த்டே ஹேஷ் உருவாக்கி இருப்பதுடன் ‘விரைவில் உங்களை சந்திக்கிறோம்’ என பட தரப்பு தெரிவித்திருக்கிறது. ரசிகர்கள் அந்த போஸ்டரை நெட்டில் வைரலாக்கி கொளுத்துங்கடா என பரபரக்க வைத்திருக்கின்றனர்.