லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் என்பதைப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சுடசுட சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .

ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் படம் மொத்தம் 74 இடங்களில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு வாழ் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் ஹைதராபாத்தில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கி விட்டதாக ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர் .