லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் என்பதைப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்டு அசத்தியுள்ளது படக்குழு. இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள் .