ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ வெளியாக வாய்ப்பில்லை : லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் மாதமே திரையிட தயாராக இருந்தது . கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூப்பட்டிருப்பதால் இந்த படம் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்டது .

இதனிடையே, தயாராகியுள்ள பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தப் பட்டியலில் அவ்வப்போது ‘மாஸ்டர்’ பெயர் இடம்பெறும். படக்குழுவினரோ ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என்றே பதிலளித்து வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது கோயம்புத்தூரில் விஜய் ரசிகர் மன்றத்தினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.:=

“ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ வெளியாக வாய்ப்பில்லை. திரையரங்கில் தான் வெளியாகும். ரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் ‘மாஸ்டர்’ எப்போது வெளியீடு என்பது குறித்த அறிவிப்பு வரும். அந்தப் படம் எப்போது வந்தாலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்” என தெரிவித்துள்ளார்

You may have missed