விஜய்யின் ’மாஸ்டர்’ இம்மாதம் ஒடிடியில் ரிலீஸ் ஆகிறதா? அமேசான் வெளியிட்ட பட்டியலால் பரபரப்பு..

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க மாளவிகா மோகனன் கதாநாயகனாக நடிக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட் டிருப்பதால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் வெளி யாகிறது ஏற்கெனவே மாஸ்டர் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளி யானது. அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்ததுடன் தியேட்டரில்தான் மாஸ்டர் வெளி யாகும் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அமேசான் ஒடிடி தளம் ஆகஸ்ட் மாதம் வெளியிடும் பட பட்டியல் வெளியிட்டி ருந்தது. அதில் மாஸ்டர் பட பெயர் இடம் பெற்றி ருந்தது. அதைக்கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தளபதி படம் ஒடிடியில் வெளி வருகிறதா என்று கேட்டனர்.
அதுபற்றி செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ள விளக்கத்தில்.’அமேசான் பிரைம் லிஸ்ட்டில் வெளியாவது 2016ம் ஆண்டு வெளியான கொரியன் படம் மாஸ்டர். தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் அல்ல. விஜய் நடித் துள்ள மாஸ்டர் தியேட்டரில் தான்ரிலீஸ் ஆகும் ’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.