‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய் .XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகளில் கூறப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருப்பதால் நடிகர் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் உடனான இந்தச் சந்திப்பில் அமைச்சர் வேலுமணி, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் உடனிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தரப்பில் இதுவரை இச்சந்திப்பு நடந்ததை மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிட உள்ளதாக மாஸ்டர் படத்தின் குழு ட்விட்டரில் அறிவித்திருந்த நிலையில், ‘மாஸ்டர் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது .