விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி மாஸ்டர் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் ‘ வாத்தி கமிங் ஒத்து’ பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.