லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ இன்று (ஏப்ரல் 9) வெளியாக வேண்டிய படம் கொரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் நினைத்தபடி வெளியாகாவில்லை.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர் . இன்று எப்படிக் கொண்டாடி இருக்க வேண்டியது, இப்படி ஆகிவிட்டதே என ட்விட்டரில் புலம்பி வருகின்றனர் .

தொடர் ட்வீட்களால் இந்திய அளவில் #MasterFDFS என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே, ‘மாஸ்டர்’ படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஊரடங்கு நமது தன்னம்பிக்கையை வீழ்த்தி விடக்கூடாது. ‘மாஸ்டர்’ உங்களை விரைவில் சந்திப்பார்” என்று தெரிவித்துள்ளது.