‘மாஸ்டர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய் .XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று மாஸ்டர் திரைப்படம் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாஸ்டர் படக்குழு ஒரு புதிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுவது போல உருவாகியுள்ள இந்த வீடியோவுடன், ரிலீஸ் பற்றிய அப்டேட் நாளை 12.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.