‘முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்’; மாஸ்டர் படத்தின் இரண்டாவது ப்ரோமோ….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து , படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது ப்ரோமோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.அதில் முதல் முறையாக விஜய் பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

 

You may have missed