ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இத்திரைப்படம் வரும் 2021-ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வைரல் ஆகி வரும் தகவல் என்னவெனில் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என்றும், நெட்பிலிக்ஸ் நிறுவனம் அதன் உரிமையை பெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீசாகும் என்றும், அதற்குப் பிறகு தான் நெட்பிலிக்ஸ்ல் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.