ஜனவரி 13ம் தேதி ‘மாஸ்டர்’ ரிலீஸ் உறுதி…..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.

பல மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மாஸ்டர் படம் பொங்கலுக்கு தான் ரிலீஸாகிறது என்பதை அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதி செய்துள்ளார்.

மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி வருது. பொங்கல் எல்லாம் வருது. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் தியேட்டர்களுக்கு கூடுதல் பேர் வர அனுமதி கேட்டிருக்கிறீர்கள். ஆனால் மாஸ்டர் படம் ரிலீஸாவதற்கு முன்பே தமிழகத்தில் கொரோனாவே இல்லாமல் போய்விடும் என்று கூறியுள்ளார் .