நடிகை ரம்யாவுக்கு இன்பதிர்ச்சி தந்த மாஸ்டர் படக்குழு….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கல் தினத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் ரம்யா கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார். ரம்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் இந்த மாஸ்டர்.

விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் என்பதைப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படக்குழு ரம்யாவுக்கு இன்பதிர்ச்சி தந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜய்யின் உருவ சிலையை ரம்யாவுக்கு பரிசளித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

https://twitter.com/XBFilmCreators/status/1347777892806103041