திட்டமிட்டபடி ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை வெகு விமரிசையாக நடத்தினர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வரும் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார். .

இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர்.

இதனால் மார்ச் 20-ம் தேதி வெளியாகவிருந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ மற்றும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த ‘காடன்’ ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளன.

மேலும், ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் ‘மாஸ்டர்’ வெளியீடு கண்டிப்பாக ஏப்ரல் 9-ம் தேதி இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .