‘மாஸ்டர்’ படம் தியேட்டரா இல்லை ஓடிடி-வெளியீடா…..? தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’ .

தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காகத் தான்.

ஏப்ரல் ஒன்பதாம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அனைவரையும் வீட்டுக்குள் முடக்கிவிட்டது .

தொடர்ந்து தியேட்டர்களை திறக்க தாமதமாகும் என்பதால் ஒரு சில தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை நேரடியாக ஓடிடி இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் , விஜய்யின் மாஸ்டர் படத்தையும் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அடிக்கடி தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படம் நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

இந்த வருட தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கல் – எப்போது ரிலீஸ் என்பதை சூழ்நிலையின் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் அவர்.