காவிரி மேலாண்மை வாரிய தலைவராக மசூத் ஹூசைன் நியமனம்

டில்லி:

மத்திய நீர் ஆணைய தலைவர் மசூத் ஹூசைன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராரக ஏ.எஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ். கே.பிரபாகர் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டில்லியில் செயல்படவுள்ளது

புதுச்சேரி சார்பில் பொதுப்பணித்துறை செயலர் கே. அன்பரசு, கேரளா சார்பில் பகு டிங்கு பிஸ்வால் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா சார்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.