டாக்கா:

மேட்ச் ஃபிக்சிங் புகாரில் சிக்கி உள்ள  வங்கதேச ஆல்ரவுண்டர் சகிப் அல்ஹசன்  விளையாடஐசிசி  தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசி அணி இந்தியாவில் விளையாட  நவம்பர் 3-ம் தேதி வருகிறது.  இங்கு‘3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் சகிப் அல்ஹசனுக்கு மேட்ச் பிங்சிங் புகாரில் தடை விதிக்கப்பட இருப்பதாகவும், அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ஐசிசி விதிமுறைப்படி வீரர்களை எந்தவொரு சூதாட்டத் தரகர்கள் அணுகினாலும், அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு,  அல்ஹசனை ஒரு சூதாட்ட புரோக்கர் அணுகியதாக சமீபத்தில்  தகவல் வெளியானது. இதுகுறித்து சகிப் அல்ஹசன் அணி நிர்வாகத்திடம் புகார் அளிக்காத நிலையில், தற்போது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஐசிசி சமீபத்தில்  சர்வதேச அளவில் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள  புரோக்கர்களின் தொலைப்பேசி எண்களை  குறித்துஆய்வு செய்தபோது, சகிப் அல்ஹசனிடம் ஒரு புரோக்கரிடம் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து, விசாரணை நடத்தி வரும் ஐசிசி, அல்ஹசன் விளையாட 18 மாதம் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சகிப் அல்ஹசன்,  ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். இருந்தாலும் அவர் மீதான தடை உத்தரவு விரைவில் வெளியாகும் என வங்கதேச ஊடுகமான சமக்கல் தெரிவித்து உள்ளது.

சகிப் அல்ஹசனுக்கு தடைவிதிக்கப்பட்டால், அவருக்கு பதிலாக வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.