அமெரிக்காவிலிருந்து திரும்பியதால்,தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட மம்தா மோகன்தாஸ்….!

கொரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனால் சில திரையுலகப் பிரபலங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியதால் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.

அந்த வரிசையில் நடிகை மம்தா மோகன்தாஸ் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.