துரா

கிருஷ்ண ஜன்ம பூமி அருகே அமைந்துள்ள மசூதியை அகற்றக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுவை மதுரா நீதிமன்றம் ஏற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதியை அகற்ற நெடுங்காலமாக வழக்கு நடந்து வந்தது .  அதன் பிறகு 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி கரசேவகரகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது   அதையொட்டி அந்த நிலம் தொடர்பாக நடந்த வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது.

இதைப் போல் உபி மாநிலத்தில் மதுரா நகரில் கேசவ்தேவ் கோவில் அமைந்துள்ளது.   இது கிருஷ்ண ஜன்ம பூமி எனக் கூறப்படுகிறது.   இந்த கோவிலின் அருகே ஒரு மசூதி உள்ளது. அதற்கு ஈத்கா மசூதி என பெயர் உள்ளது இந்த மசூதி கிருஷ்ண ஜன்ம பூமியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புக்கள் கூறிவருகின்றன.

இதையொட்டி இந்து அமைப்புக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “நமது நாட்டில் முகலாயர் ஆட்சி காலத்தில்  பல் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டன. அவற்றில் ஒன்றான மதுரா நகர் கிருஷ்ண ஜன்ம பூமியான கேசவ் தேவ் கோவிலில் ஒரு பகுதி இடிக்கப்பட்டு ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது.  எனவே இந்த மசூதியை அகற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த மனுவை மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.