a

த்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
மதுராவில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, இந்த வன்முறை ஏற்பட்டது.
கடந்த வியாழக்கிழமை மாலையில் ஆர்ப்பட்டக்காரர்களுக்கும்,  காவல்துறையினருக்கும் இது தொடர்பாக மோதல் தொடங்கியது. இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  அவர்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூழலில்  நான்கு பேர் மருத்துவமனையில் இறந்துள்ளனர். இதில் இன்று மேலும் இருவர் மருத்துவமனையில் மரணமடைந்தனர்.
இதனால், மதுரா வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை  அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை 50 லட்சம் ரூபாயாக உத்தர பிரதேச மாநில அரசு  உயர்த்தி உள்ளது.