மதுசூதனன் அணியே அதிமுக….! தேர்தல் கமிஷன் தீர்ப்பு

திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள தீர்ப்பில், மதுசூதன் தலைமை, ஓபிஎஸ் பொருளாளர் உள்ள அணியே அதிமுக என்பதையும் தெரிவித்து உள்ளது.

தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்து உள்ளது. சுமார் 83 பக்கம் அளவில் தீர்ப்பு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தீர்ப்புக்கான காரணத்தை 83 பக்கத்தில் விலாவாரியாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அதிமுகவின் கொடி, சின்னம், பெயர் அனைத்தும் ஒருங்கிணைந்த அதிமுகவான இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே கிடைத்துள்ளதால், இனிமேல் அதிமுக என்ற பெயர் அவர்களே பயன்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.‘

டிடிவி தரப்பினர் அதிமுக பெயர் மற்றும் கொடி, சின்னங்களை பயன்படுத்த முடியாது.

இந்த தீர்ப்பில் உள்ள 62வது ஷரத்தில்,  மதுசூதனன் அவைத்தலைவர், ஓபிஎஸ் பொருளாளர் என்ற அவர்களி தலைமையிலான அணியே அதிமுக  என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

இரட்டை இலையை முடக்கி மார்ச் 22ல் பிறப்பித்த உத்தரவை திரும்பபெறுகிறோம் என்றும்,
மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என்ற பெயரை பயன்படுத்தலாம் என்றும்,
ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி இரட்டை இலை சின்னம், கட்சிக்கொடி, அதிகாரப்பூர்வ கடிதம் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும் கூறி உள்ளது.

மேலும், அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2128 என்றும் 2128 பேரில் 1877 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி – பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப். 12 ஆம் தேதி நடைபெற்ற சென்னை பொதுக்குழு தீர்மானத்திற்கு 1877 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினகரன் தரப்புக்கு     6 எம்.பிக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் எடப்பாடி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழு உட்பட அனைத்து அமைப்புகளிலும் எடப்பாடி – பன்னீர் அணிக்கே பெருன்பான்மை உள்ளது.

மக்களவையில் எடப்பாடி அணிக்கு 34 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ள னர். மாநிலங்களைவையில் எடப்பாடி அணிக்கு 8 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.