ஆர்.கே.நகரில் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்தார்!

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளரான மதுசூதனன், தேர்தல் அதிகாரி நாயரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, ஓ.பி.எஸ் அணியினர் சென்னை மெரினா கடற்கரை சென்றளர்.  அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து, மரியாதை செலுத்தினர்.

இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியுள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஓபிஎஸ் அணிக்கு  அம்மா அதிமுக என்ற பெயரை உபயோகப்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.