நடிகர்களை தற்கொலை எல்லைக்கு கூட்டிச் செல்வது யார்? நடிகை நிலா சரமாரி புகார்..

நடிகை மீரா சோப்ரா தமிழில் நிலா என்ற பெயரில் மருதமலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே அவர் இந்தி படங்களில் நடிக்க முயன்றுக்கொண்டிருக் கிறார். ஆனால் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்க வல்லை. அவ்வப்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்த போதும் பாலிவுட்டில் உள்ள வாரிசு காலச்சாரம் பற்றி சாடினார். இன்று மீண்டும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:


சினிமா துறையில் நடிகர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர் களை அந்த எல்லைக்கு கொண்டு வருவது ஏன் என்று நான் உட்பட ஏராளமா னோர் தங்களது மவுனத்தை உடைக்க விரும்புகிறார்கள். இந்த சிஸ்டம் உங்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படு கிறது, சில இயக்குனர்கள் உங்களை எப்படி உணர்ச்சி மற்றும் இரக்கமின்றி சுரண்டிக்கொள்கிறார்கள். (படித்தவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள், கல்வி இங்கு ஒரு பெரிய பங்கை வகிக்கிறது) நான் அங்கு இருந்தேன், நான் இன்னும் அதற்கு உட்படுத்தப்படுகிறேன். ஆனால் நிலைமை என்னவென்றால், நீங்கள் வாய் திறக்கும்போது உங்களுக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கும், எத்தனை பேர் உங்களுடன் நிற்கிறார்கள்.
சுஷாந்தின் தற்கொலைக்குப் பிறகு அது நிறுத்தப் பட்டதா ?? இல்லை… எல்லாவற்றிற்கும் பயம் இறுதியில் அந்த நடவடிக்கையை எடுக்க வைக்கிறது. இது ஒருபோதும் வேலையைப் பற்றியது அல்ல, தொழில் துறையில் ஏராளமாக இருக்கிறது, இது உங்கள் சுய மரியாதை, கவுரவம், கொள் கைகள் மற்றும் பெரும் பாலானவற்றில் உங்கள் அமைதி பற்றியது ”என குறிப்பிட்டிருக்கிறார் நடிகை நிலா.