சென்னை:
டந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கிய கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில்  புதிதாக 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தது.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடி குடியிருப்பு 2014 ஆம் ஆண்டு ஜூன் 28-ந் தேதியன்று மழையின் போது மளமளவென இடிந்து சரிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.
2mkouli
தீயணைப்புதுறையினர், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் இணைந்து  மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவும் பகலுமாக ஒருவாரம் நீடித்த மீட்புப் பணியில் 50க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டாலும், இடிபாடுகளில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பான்மையானோர் ஆந்திராவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள்.
இதையடுத்து அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தையும்  இடிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இடிக்கப்பட இருக்கும் 11மாடி கட்டிடம்
இடிக்கப்பட இருக்கும் 11மாடி கட்டிடம்

இதை எதிர்த்து கட்டிட நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டும் நிராகரித்து விட்ட நிலையில் கட்டிடத்தை இடிப்பதற்கான ஏற்பாடுகளை சிஎம்டிஏ அதிகாரிகள் தொடங்கினர்.
தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து தகர்க்கும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அவர்கள் கட்டிடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி வந்தனர்.
இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த 11 மாடி கட்டிடத்தை வெடிவைத்து தகர்க்க முடிவு செய்து இருப்பதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.
கட்டிடத்தை தகர்க்க வெடி மருந்துகள் நிரப்புவதற்காக கட்டிடத்தின் பல இடங்களில் உள்ள  தூண்களில் துளை போடப்பட்டு,  அந்த துளைகளில் வெடிமருந்துகள் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இந்த கட்டிடத்தை சுற்றி சுமார் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளை ஏற்கனவே  சி.எம்.டி.ஏ.  அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கட்டிடத்தை சுற்றி சுமார் 124 வீடுகள், கடைகள் மற்றும் சிறு கம்பெனிகள் உள்ளதாக  கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரையும் தற்காலிகமாக  டும்பத்துடன் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
அவர்கள் தங்குவதற்கு வசதியாக  மவுலிவாக்கம் ஊராட்சி அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.  நாளை கட்டிடம் இடிக்கப்படுவதை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளது.
கட்டிடம் இடிக்கப்படும் போது அதனை படம்பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும் வரும் பத்திரிகையாளர்களுக்காக ராஜராஜேஸ்வரி நகர் பின் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
நாளை கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. ஆனால் எந்த நேரத்தில் தகர்க்கப்படும் என்று இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. அனைத்து பணிகளும் முடிந்த பிறகு கட்டிடம் தகர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.