ஃபார்முலா 1 கார்ப்பந்தயம் – மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன்!

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 70ம் ஆண்டு ‘கிராண்ட் பிரிக்ஸ்’ ஃபார்முலா 1 கார்ப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்.

இந்த ஆண்டுக்கான 5வது சுற்று ‘கிராண்ட் பிரிக்ஸ்’ ஃபார்முலா 1 கார்ப்பந்தயம், இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 10 அணிகளின் சார்பில் 20 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில், ஹாமில்டன் மற்றும் செபஸ்டியன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

பந்தய தூரம் 306.198 கி.மீ. இந்த தூரத்தை 1 மணிநேரம் 19 நிமிடங்கள் மற்றும் 41.993 விநாடிகளில் கடந்த முதலிடம் பிடித்தார் பெரிதாக எதிர்பார்க்கப்படாத நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன். இந்த சீசனில் இவர் பெறக்கூடிய முதல் சாம்பியன் பட்டமாகும் இது.

கோப்பை வெல்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹாமில்டனுக்கு கிடைத்தது இரண்டாமிடம். பின்லாந்து நாட்டின் வால்டேரி போட்டாஸ் மூன்றாவது இடம் கைப்பற்றினார்.

You may have missed