டில்லி

பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக அளவில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநில மருத்துவமனைகள் ஊழல் செய்துள்ளன.

பிரதமர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாடெங்கும் உள்ள வசதியற்றோருக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.  இந்த சிகிச்சைகள் பல மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மூலம் அளிக்கப்படுகின்றன.   சிகிச்சைக்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட கட்டணங்களை மருத்துவமனைகளுக்குக் காப்பிட்டு நிறுவனங்கள் வழங்கி விடுகின்றன.

இந்த திட்டத்தின் நாடெங்கும் பல மருத்துவமனைகள் இணைந்துள்ளன.  இவற்றில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்க்ளை சேர்ந்த 60% மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இருந்து தற்போது விலக்கப்பட்டுள்ளன.   இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தாகப் பொய்த் தகவல் அளித்து பணம் பெற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்தில் 75 மருத்துவமனைகளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 மருத்துவமனைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் உத்தர காண்ட் மாநிலங்களிலும்  இத்திட்டத்தில் ஊழல் புரிந்த மருத்துவமனைகள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு ஊழல் நடப்பதைத் தடுக்க கடுமையான சோதனைகள் நடைமுறையில் உள்ள போதும் இதுவரை 18681 ஊழல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க முன் அனுமதி வழங்கும் போதே பலவிதமான  சோதனைகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்படுவதாக இந்த காப்பீட்டுத் திட்ட உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.  ஆயினும் அவற்றையும் மீறி  ஒரு சில தனியார் மருத்துவமனைகள் ஊழல் புரிந்துள்ளதால் அந்த மருத்துவமனைகள் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,