இங்கிலாந்து இளவரசருக்கு நாளை திருமணம்…உலகம் முழுவதும் பார்த்து ரசிக்க சிறப்பு ஏற்பாடு

லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் ஹரி மேரி – மேகன் மார்க்லே திருமணம் நாளை (19ம் தேதி) விண்ட்சர் காஸ்டிலில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சாப்பலில் நடக்கிறது. அரசு குடும்பத்தின் இந்த திருமணம் எப்படி நடக்கிறது? என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பலருக்கும் இருக்கும். ஆனால், இது சாத்தியமா?.

அரசு குடும்பம் ஆச்சே…இதற்கு ஏற்பாடு செய்யாமலா? இருக்கும். ஆனால், இதை எந்த வழியில் பார்ப்பது என்று நமக்கு தான் இப்போது குழப்பம் ஏற்படும். ஆம்.. அந்த அளவுக்கு பல வழிகளில் நேரலை செய்யப்படுகிறது. இதில் எந்த வழியில் திருமணத்தை பார்ப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதோ அதன் விபரம்…

இங்கிலாந்தில் உள்ள அனைத்து டிவி, ரேடியோ, ஆன்லைன் ஒளிபரப்பாளர்களும் இந்த திருமண நிகழ்ச்சியை நேரலை செய்கின்றனர். மேலும், இதையொட்டி பிபிசி ஒன் மற்றும் பிபிசி நியூஸ், ஸ்கை ஆகியவற்றில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. ஐடிவி கிக்ஸ் காலை 9.25 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பிபிசி நியூஸ் வெப்சைட், பிபிசி ஐபிளேயரிலும் ஒளிபரப்பாகிறது. இது தவிர பிபிசி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நாள் முழுவதும் ஒளிபரப்பாகிறது.பிபிசி ரேடியோ 4, ரேடியோ 5 ஆகியவற்றில் பிற்பகல் 11.30 மணி முதல் நேரடி வர்ணனை செய்யப்படுகிறது. பிரிட்டனுக்கு வெளியே பிபிசி அமெரிக்கா, பிபிசி கனடா, பிபிசி வேர்ல்டு நியூஸ், பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் ரேடியோ ஆகியவற்றிலும் பார்க்கலாம், கேட்கலாம்.

இது தவிர விண்ட்ஸ்டர் முக்கிய வீதிகளின் பல இடங்களில் கொண்டாட்டத்துடன் கூடிய பெரிய திரையில் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.