2019 உலகக்கோப்பை தான் இந்தியாவிற்கான தோனியின் கடைசி ஆட்டம் – ஹர்பஜன் சிங்

--

டெல்லி

2019 உலகக்கோப்பை தான் தோனி இந்தியாவிற்காக ஆடிய கடைசி ஆட்டம் என தோனிக்கே தெரியும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என்பதைக் கடந்தும், தோனி எப்போது விளையாட வருவார் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் இப்போதைய கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து பல கிரிக்கெட் வீரர்களும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரோகித் ஷர்மா மற்றும்  ஹர்பஜன்சிங் இருவரும் இன்ஸ்டா வழியே ரசிகர்களுடன் உரையாடினர்.

தோனி எப்போது விளையாட வருவார் என ரசிகர் ஒருவர் ரோகித் ஷர்மாவிடம் கேட்டபோது, “இந்த கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை” என பதிலளித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங்,”என்னை பொறுத்தவரை தோனி இந்திய அணியில் மீண்டும் விளையாடுவது தேவையில்லை என்றே தோன்றுகிறது. 2019 உலகக் கோப்பையே தோனிக்கு கடைசி ஆட்டம் என்று அவருக்கே நன்கு தெரியும்”, எனக் கூறினார்.

ஹர்பஜனின் இப்பேச்சு இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் வீரர்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது