‘மிஸ்டர் கிளீன்’ என்று இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் 29வது நினைவு தினம் இன்று.
இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம். இந்திய மக்களை சொல்லோனா துயரத்திற்கு ஆட்படுத்தி, இவ்வுலகை விட்டு பிரிந்த தினம் இன்று.

உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தி தமது 40 வயதிலேயே இந்தியாவின் ஆறாவது  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்..
‘மிஸ்டர் கிளின்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளை சேர்ந்த தற்கொலைப்படை பெண் ஒருவரால் அநியாயமாக கொல்லப்பட்ட தினம் இன்று.
இலங்கையில் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட ராஜீவ்காந்தி, அதே தமிழர்களால் கொல்லப்பட்ட கறுப்பு தினம் இன்று.
1991ம் ஆண்டு  21 மே 21ந் தேதி 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருப்பெரும்புதூர் அருகே நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், தற்கொலை பெண் ஒருவரின் குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கோர குண்டுவெடிப்பில் அவருடன் சேர்ந்து மேலும்  14 நபர்கள் கொல்லப்பட்டனர். அடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட மாபெரும் இளம் தலைவர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர்; அவரது பரம்பரையே தியாகப் பரம்பரை; சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்; அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது.
இன்று அவரது நினைவு தினத்தில், அவரது புகழை போற்றுவோம்.