மே 8-ம் தேதி: திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகள் அமைப்புகள் சார்பில் வரும் 8ந்தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவை செயல்படுத்த மறுக்கும் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக திருச்சியில் மே 8-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

தமிழகத்தை மாற்றந்தாய் மனப்பான்மையும் நடத்தி வரும் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி குறித்த வரைவுத் திட்டம் ஏதும் அமைக்காமல், தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில், மே 8-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.