லக்னோ:

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பதே பிஎஸ்பியின் நோக்கம் என்று இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிஎஸ்பி தலைவர் மாயாவதி தனது பிறந்த நாள் சூளுரையாக தொண்டர்களிடையே கூறினார்.

குஜன் சமாஜ்  கட்சியின் தலைவர் மாயாவதிக்கு இன்று 63வது பிறந்தநாள். இதையொட்டி உ.பி.யில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் பிரமாண்ட மான கேக் வெட்டப்பட்டது.

மாயவதி பிறந்தநாளுக்காக தயாரிக்கப்பட்ட 63 கிலோ கேக்

மாயாவதி பிறந்தநாளையொட்டி 63 கிலோ எடையில் பிரமாண்டமான கேக் உருவாக்கப்பட்டி ருந்தது. கேக் முழுவதும் வெள்ளை மற்றும் நீலக் கலர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த கேக்கை மாயவதி தனது கட்சி தலைவர்கள், தொண்டர்கள் முன்னிலையில் வெட்டி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.

அப்போது தொண்டர்களிடைடையே பேசிய மாயவதி, தனது பிறந்த நாள் பரிசாக பிஎஸ்பி, சமாஜ் வாதி  கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என மாயாவதி கேட்டு கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைசந்தித்த மாயாவதி, வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.. இதுவே தனது நோக்கம் என்று தெரிவித்தார்.

பாஜகவுக்கு சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்கள் சரியான பாடம் புகட்டப்பட்டது. அது போல இது காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு பாடம் என்று கூறியவர், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அரசு ஏற்கனவே மக்களுக்கு கொடுத்த  வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.

நாங்கள் எப்பொழுதும் ஏழைகளுக்காக வேலை செய்து வருவதாக கூறியவர், தொடரும் விவசாயி கள் தற்கொலைகளை தடுக்க  100% விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக ஒரு வலுவான விவசாய கடன் தள்ளுபடி கொள்கை திட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

பயிர் விலைகளை உயர்த்துவதற்காக சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். நிலமுள்ள மற்றும் நிலமற்ற விவசாயிகள் கடன் வாங்கியுள்ளனர், ஆனால் அவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கான கொள்கை திட்டம் இல்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவையும் அவர்களது துயரத்தை அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாயாவதிக்கு கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் தனது மனைவி டிம்பிள் உடன் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இரு கட்சிகளும் இணைந்து பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.