க்னோ

குஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி பிரதமர் மோடியின் அரசை ஒரு மூழ்கும் கப்பல் என விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஒரு தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ராஜஸ்தான் மாநில ஆளும் கட்சியான காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு அளித்து வருகிறது. பிரதமர் மோடி இது குறித்து, “தலித்துகளுக்காக மாயாவதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். ஆனால் ஆல்வார் சம்பவத்துக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் தமது கட்சி காங்கிரஸுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை” என குற்றம் சாட்டினார்.

இது பகுஜன் சமாஜ் கட்சி தலைவியான மாயாவதிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், “மோடியின் அரசு ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளது. ஆர் எஸ் எஸ் கூட அந்த அரசுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தி விட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மக்கள் எதிர்ப்பு, ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் ஒத்துழையாமை, உள்ளிட்ட அனைத்தும் மோடியை நடுங்க வைத்துள்ளது. அதனால் இப்படி உளறுகிறார்.

தற்போது அசிங்கமான அரசியல் நடத்தி வரும் மோடி இதற்கு முன்பு தலித்துகள் கொடுமை செய்யப்பட்ட போது ராஜினாமா செய்துள்ளாரா? மக்களை திசை திருப்ப பல தலைவர்கள் வேலையாட்கள், தலைமை வேலையாட்கள், தேநீர்க்கடைக்காரர் மற்றும் காவலர்கள் ஆகி உள்ளனர். நமக்கு இப்போது ஒரு உண்மையான பிரதார் தேவை. மக்களை இனியும் ஏமாற்ற முடியாது” என பதில் அளித்துள்ளார்.