க்னோ

குஜன் சமாஜ் கட்சி சட்டப்பேரவை உறுப்பின்ர் ரமாபாய் பிரிகார் குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் அவரை கட்சியில் இருந்து அக்கட்சித் தலைவி மாயாவதி நீக்கி உள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   இந்த சட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் தொடர் போராட்டம் நிகழ்ந்து வருகிறது இந்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.

நாடெங்கும் நடந்து வரும் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு  தெரிவித்து வருகின்றனர்.  அவர்களில் பகுஜன் சமாஜ் கட்சியைத் தலைவி மாயாவதியும் ஒருவர் ஆவார்.  ஆனால் அவர் கட்சியைச் சேர்ந்த பெண் சட்டப்பேரவை உறுப்பினர் இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பதாரியா தொகுதி சட்டப்பேரவை பெண் உறுப்பினர் ரமாபாய் பிரிகார் குடியுரிமை சடத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  இது உ பி மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   எனவே ரமாபாயை  அக்கட்சித் தலைவி மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலக்கி கட்சி நிகழ்வுகளில் பங்கேற்கத் தடை விதித்துள்ளார்.