ராகுலை வெளிநாட்டவர் என சொன்ன தலைவரை பதவி நீக்கிய மாயாவதி

--

டில்லி

குஜன் சமாஜ் ஜட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் சிங் என்பவரை மாயாவதி பதவி நீக்கம் செய்துள்ளார்

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் சிங் என்பவர் சமீபத்தில் கட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர் அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டவர் எனவும் அதனால் அவர் பிரதமர் பகுதிக்கு தகுதியற்றவர் எனவும் விமர்சித்தார்.

இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.  அவர், “பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாலர் ஜெயப்பிரகாஷ் சிங்  கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.   எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து அவர் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.  அவர் அவ்வாறு பேசியதற்காக கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்காமல் நமது கட்சியின் கொள்கைகள் மற்றும் நம் கட்சி தலைவர்களின் சாதனைகள் குறித்து மட்டுமே நம் கட்சியினர் பேச வேண்டும்.   தேர்தல் கூட்டணி பற்றிய தனிப்பட்ட கருத்துக்களையும் தற்போது தெரிவிக்க வேண்டாம்.   கூட்டணி பற்றி கட்சித் தலைமை முடிவு எடுக்கும்” என தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

You may have missed