இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்ற நடைபெற்ற விமான விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்துக்கு சற்று நேரத்திற்கு முன்பு விமான மேடே, மேடே என கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று பயணிகள்  விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பாக குடியிருப்பு பகுதிக்குள்   விழுந்து நொறுங்கியது. இந்த  விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை கடந்த வாரம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், நேற்று இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது.
லாகூர் நகரிலிருந்து கராச்சி நகருக்கு  91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொதத்ம் 99 பேருடன் அரசுக்கு சொந்தமான பிஐஏ நிறுவன்ததின்  பிகே8303 என்ற விமானம் புறப்பட்டது. விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் விமானம் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே உள்ள மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதுகுறி்த்து சிந்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்ரா பெச்சுஹோ கூறுகையில் “ விமான விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 82 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் மொத்தம் 32 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 99 பேர் இருந்தனர். இவர்களில் 97 பேர் பலியான நிலையில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள சுமார் 25 முதல் 30 வீடுகள்  சேதமடைந்துள்ளன என தெரிவித்து உள்ளார்.

தப்பிய இருவருமே நிலையான நிலையில் உள்ளதாகவும், இதுவரை பலியான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய சிந்து சுகாதார அமைச்சரின் ஊடக ஒருங்கிணைப்பாளர் மீரன் யூசுப், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள், விபத்து ஏற்பட்டபோது வெள்ளிக்கிழமை தொழுகைக்கான நேரம் இது என்று கூறினார். காயமடைந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் நிலையான நிலையில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
சிந்து சுகாதார அமைச்சர் அஸ்ரா பெச்சுஹோ, பஞ்சாப் வங்கியின் தலைவர் ஜாபர் மசூத் உட்பட இரண்டு பேர் தப்பியுள்ளனர் என்று கூறினார். அவர் தனது நல்வாழ்வை தெரிவிக்க தனது தாயை அழைத்தார்.
எடிநலன்புரி அறக்கட்டளையின் பைசல் எடி கூறுகையில், விமானத்தால் வீடுகள் சேதமடைந்த சுமார் 25 முதல் 30 குடியிருப்பாளர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், பெரும்பாலும் தீக்காயங்களுடன்.
விபத்துக்குள்ளானபோது விமானத்தின் சிறகுகள் கீழே விழுந்ததற்கு முன்பு குடியிருப்பு காலனியில் உள்ள வீடுகளைத் தாக்கியது. “இந்த சம்பவத்தில் குறைந்தது 25 வீடுகள் சேதமடைந்துள்ளன” என்று எடி கூறினார்.
இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகவிலலை. ராடாரில் இருந்து விமானம் காணாமல் போவதற்கு முன்பு, தரையிறங்கும் கியரில் சிக்கல் இருப்பதாக கேப்டன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தெரிவித்ததாக பிஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானம் “தொழில்நுட்ப சிக்கல்களை” சந்திப்பதாக விமானி போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு தெரிவித்ததாக கூறினார்.
“விபத்துக்கான உண்மையான காரணம் விசாரணையின் பின்னர் அறியப்படும், இது  நியாயமானதாகவும் இருக்கும், மேலும் அது ஊடகங்களுடன் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார். முழு நடவடிக்கையும் முடிவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும் என்று மாலிக் கூறினார்.
இந்த விபத்துக்கான காரணத்தை அறிய பாகிஸ்தான் நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

அரசாங்கத்தின் விமானப் பிரிவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விசாரணையை மிகக் குறுகிய காலத்திற்குள் முடிக்குமாறு வாரியத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்த பாகிஸ்தானின்  கண்காணிப்பு வலைத்தளமான liveatc.net இல் பாகிஸ்தானின் துன்யா நியூஸ் மே டே மேடே என்று உரையாடலின் பதிவைப் பெற்றதாகக் கூறியது, அதை ஊடகங்களில் வெளியிட்டது.
அதில், பைலட், விமானத்தின்  “இரண்டு என்ஜின்களும் செயழிந்து விட்டது” என்று கூறுகிறார். பல விநாடிகள் கழித்து அவர் “மேடே, மேடே, மேடே” என்று அழைக்கிறார், மேலும் தொடர்பு இல்லை.