சென்னை:
மிழகத்தின் 38வது மாவட்டமாக உதயமான மயிலாடுதுறை  மாவட்டத்தின் எல்லைகளை வரை செய்யும் வகையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி,  மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாத் ஐபிஎஸ் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது. அவர்கள் இன்று பொறுப்பேற்றனர்.

அரசின்  நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்றாக தமிழக அரசு பிரித்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாக தமிழகஅரசு  அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் 38வது மாவட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்தார்.
இந்த நிலையில் மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாத் ஐபிஎஸ் ஆகியோரை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி லலிதா ஐஏஎஸ் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதேபோல் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐபிஎஸ் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்பதில் பெருமை அடைகிறேன்.
பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எந்த பிரச்னைகள் குறித்தும் தன்னை நேரில் சந்திக்கலாம் அல்லது தனது செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
கொரோனா காலத்தில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடித்தால் தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்றார்.