உள்கட்டமைப்பு செய்யாமல் மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிப்பதா? மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்கட்டமைப்பு செய்யாமல் மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிப்பதா?  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகஅரசு மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்று உதயமானது. முதல்வர் எடப்படி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், நாகை, திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு காணொலி காட்சி மூலம் சிறப்புரை ஆற்றினார். அப்போது,  புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டால் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டாமா? சும்மா பெயர் வைத்தால் போதுமா?  என கடுமையாக சாடினார்.