ஓரீரு மாதங்களில் மயிலாடுதுறை தனிமாவட்டமாகும்: எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் உறுதி

ஓரீரு மாதங்களில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், “மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, பூம்புகார், சீர்காழி, மற்றும் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். தற்போது முதல்வர் வெளிநாடுகளுக்கு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறார். முதல்வர் நாடு திரும்பியதும், அது தொடர்பான பணிகள் தொடங்கும். ஓரிரு மாதங்களில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும். மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஓரீரு மாதங்களில் நிறைவேறும்” என்று தெரிவித்தார்.

You may have missed