எம்சிஏ.,எம்பிஏ., கலந்தாய்வு: ஜூலை 29ல் ஆரம்பம்

கோவை:

மிழகத்தில் அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சேருவதற்கான எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. படிப்புகளுக்கான  கலந்தாய்வு வரும் 29ந்தேதி கோவையில்தொ டங்குகிறது.

TANCET-2016-result

தமிழகத்தில் எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான டான்செட் தேர்வு ஏற்கனவே நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு 29ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ., படிப்புக்கான கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் www.gct.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். கலந்தாய்வில் கலந்துகொள்வதறக்கான அழைப்பு கடிதத்தையும் இந்த  இணைய தளத்திலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதுபோல் எம்பிஏ மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 4ந்தேதி ஆரம்பமாகி 14ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதத்தினை  www.gct.ac.in, www.tn-mbamca.com  என்ற இணைய தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலா என கோவை அரசு தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் சத்தியபாமா வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.