சென்னை:

ருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஏராளறமான விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், நாளை தர வரிசை பட்டியல் வெளியாக உள்ளது.  இதையடுத்து வரும் 26ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு மூலமே ஒதுக்கிடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை  தொடர்ந்து மருத்துவ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 6ந்தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தது.  அரசு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர 25,388 பேரும் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாளை தர வரிசை பட்டியல் வெளியாவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். அதைத் தொடர்ந்து, வரும்  26 ஆம் தேதி மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.