டி10 லீக் தொடரில் ரஷீத் கான், மெக்கலம், வாட்சன் பங்கேற்பு

--

டி10 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட ரஷித்கான், மெக்கலம், நரின், வாட்சன், அந்த்ரே ரஸ்ம் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 10 ஓவர் கொண்ட லீக் தொடர் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது.

rashid

சர்வதேச அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பத்து ஓவர்கள் கொண்ட டி10 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களை ஸ்பான்சர்ஸ் ஏலம் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ரஷீத்கான் 21 விக்கெட்டுக்களை எடுத்த நிலையில் டி10 போட்டியில் இடம்பெற்றுள்ளார்.

வழக்கமாக ஆறு அணிகள் மட்டுமே இடம்பெறும் டி10 கிரிக்கட் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொடரில் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான ரஷீத் கான் மற்றும் அந்த்ரே ரஸில் பங்கேற்கிறார்கள். ரஷீத்கார் மாரத்தா அரேபியன்ஸ் அணி சார்பாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். முஜீப் உர் ரஹ்மான் பெங்கால் டைகர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. கிறிஸ்டெனட் ராஜ்புத்ஸ் அணியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது ஷேசாத்தையும், கேரளா கிங்ஸ் அணி அயர்லாந்தை சேர்ந்த லார் ஸ்டிர்லிங்கையும் ஏலம் எடுத்துள்ளன.

ஷாகித் அப்ரிடியை பாக்த்டூப்ஸ் அணியும், சோயிப் மாலிக்கை பஞ்சாபி லிஜெண்ட் அணியும் தக்கவைத்துள்ளன. இங்கிலாந்து கேப்டன் மோர்கனை கேரளா கிங்ஸ் அணியும், நார்தன் வாரியர்ஸ் அணி வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டேரன் சமியை ஏலம் எடுத்துள்ளது. ஷேன் வாட்சன் கராச்சியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். பிற வீரர்களின் ஏலம் செப்டம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.