மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உருளைகிழங்கு வருவலுடன் பரிமாறப்பட்ட ‘பல்லி’

கல்கத்தா,

மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட வருவலுடன், பொரிக்கப்பட்ட பல்லியும் பரிமாறப்பட்டது. அந்த அங்கு உணவருந்த வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று பிரியங்கா மோயித்ரா எனும் கர்ப்பிணி தமது குடும்பத்தினர் உடன்  கல்கத்தாவில் உள்ள ஒரு மெக்டோனால்ட்ஸ் உணவகத்தில் உணவருந்த வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு வருவல் (பிரைஞ்சு பிரைஸ்) ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரத்தில் சுடச்சுட உருளை வருவல் டேபிளுக்கு வந்தது. அந்த உருளை கிழங்கு சீவலுடன் பொறித்த பல்லி ஒன்றும் அதோடு இணைந்திருந்தது.

இதை பார்த்ததும் அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஓட்டர் நிவாகத்தினரிடம் புகார் கூறினார். மேலும்  போலீசிலும் புகார் அளித்தார்.

அதையடுத்து போலீசார் அந்த உணவகத்தின்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உருளை கிழக்கு வருவலுடன்  பல்லியும் பரிமாறப்பட்டது மெக் டோனால்ட்ஸ் நிறுவனத்தின் அலட்சியப் போக்கை காட்டுகிறது என்றும் , குழந்தைகளும், 6 மாத கர்ப்பிணியான நானும் அந்த உணவை கவனிக்காமல் சாப்பிட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்றும் பயத்துடன் கேள்வி எழுப்பினார்.

இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி