மலேசிய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக மதிமுக அறிவிப்பு!

சென்னை,

திமுக பொதுச்செயலாளர் வைகோவை மலேசியாவுகுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, விமான நிலையத்தில் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அவரது பாஸ்போர்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உலக தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள மலேசியன் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக அறிவித்து உள்ளது.

சென்னை – தேனாம்பேட்டை, எல்.ஆர்.சாமி கட்டடம் அருகே, செனடாப் சாலையில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன்பாக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் அவர்கள் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் சுமர்ர் 3.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.