ம.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம்: வைகோ அறிக்கை

சென்னை,

ம.தி.மு.க. கட்சியின்  உயர்நிலைக்குழு கூட்டம் அடுத்த மாதம் ஜனவரி 6-ந்தேதி நடைபெறும் என்று வைகோ அறிவித்து உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளருக்காக வாக்கும் சேகரித்தார்.

ஆனால் திமுக டெபாசிட்டை பறிகொடுத்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 6ந்தேதி கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் அடுத்த மாதம் ஜனவரி 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.  அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குகிறார்.

ம.தி.மு.க.வின் உயர் நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்