கோத்தபய இந்தியா வருகை: எதிர்ப்பு தெரிவித்து ஜந்தர்மந்திரில் வைகோ போராட்டம்!

டெல்லி:

ரசுப் பயணமாக டெல்லி வரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டம் நடத்தினார்.

இலங்கை புதிய அதிபராக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய வரும்படி அழைப்பு விடுத்தார்.

மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய 3நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லி வருகை தருகிறார். இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே வருகையை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் வைகோ தனது கட்சியினருடன் சேர்ந்த போராட்டம் நடத்தினார். தமிழர்களை கொன்று குவிந்த கோத்தபய திரும்பி போ என்ற பேனர்களுடன் போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, வைகோ உள்பட மதிமுக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

You may have missed