தொகுதி பங்கீடு பற்றி திமுகவுடன் பேச்சு நடத்த மதிமுக சார்பில் குழு அமைப்பு…!

சென்னை: தொகுதி பங்கீடு பற்றி திமுகவுடன் பேச்சு நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி விட்டனர்.

நேற்றைய தினம் அதிமுக சார்பில் பாமக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந் நிலையில், நாளை மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந் நிலையில், தொகுதி பங்கீடு பற்றிய திமுகவுடன் பேச்சு நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மல்லை சத்யா, செந்திலதிபன், கு.சின்னப்பா, அந்திரிதாஸ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.