மீ டூ: ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது அர்ஜுன் வழக்கு!

ன்மீது பாலியல் குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதிஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜுன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மீ டூ என்கிற ஹேஷ்டேக் மூலம்ஸ உலகம் முழுதுமுள்ள பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.  இந்தியாவிலும் மும்பையை மையம் கொண்ட இந்த மீ டூ புயல், தமிழகத்தையும் தாக்கியது.

திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, ராதாரவி, சிம்பு, பிராமணர் சங்க தலைவர் நாராயணன், கர்நாடக இசைக்கலைஞர்கள் டி.என். சேஷகோபாலன், ரவிகிரண், சசிகிரண் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இவர்,  நெருங்கி வா முத்தமிடாதே,  நிலா,  நிபுணன்  படங்களில் நடித்துள்ளார்.

இவர், “;2016 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுனுடன் இருமொழியில் தயாரான படமொன்றில் (நிபுணன்) நடித்துக் கொண்டிருந்தேன். அதில் இருவருக்குமிடையேயான காதல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது,   இருவரும் கட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது ஒத்திகை யின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார்.

ஆனால் படமாக்கப்பட்டபோது, முன்கூட்டியே எதுவும் சொல் லாமல், கட்டிப் பிடித்தவாறு என் முதுகில் கைகளால் மேலும், கீழும் தடவினார். என் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார்.
உடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா என்று கேட்டேன். அவர பதில் சொல்லவில்லை.

எனக்கு ஆத்திரமாக இருந்தது. என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் சொல்லவில்லை. மேக் அப் அறை குழுவினரிடம் மட்டும் சொன்னேன். படப்பிடிப்பில் 50 பேர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்ததுட என்று பதிவிட்டருந்தார்.

இதை நடிகர் அர்ஜுன் மறுத்திருந்தார்.

ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். வேறு சிலர்  ஸ்ருதி ஹரிஹரன் விளம்பர நோக்கில் பொய் புகார் கூறுவதாக கருத்து கூறினர்.

நடிகர் அர்ஜுனின் மாமனார் ராஜேஷ், கன்னட திரைப்பட வர்த்தக சபையில் ஸ்ருதி மீது புகார் செய்தார்.  இதையடுத்து ஸ்ருதி ஹரிஹரன்- அர்ஜுன் ஆகிய இருவரையும் அழைத்து சமரச கூட்டத்தை நேற்று நடத்தியது.

கன்னடநடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் சென்னேகவுடா, தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், முனிரத்னா உள்பட நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

நடிகர் அர்ஜுன் நடிகை ஸ்ருதி ஹரஹரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இருவரிடமும் தனித்தனியாக அம்பரீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். தனக்கு நடந்த பாலியல் தொல்லையை ஸ்ருதி தெரிவித்தார். அர்ஜுன் அதை மறுத்தார். இறுதியில் இருவரும் சமரசத் தீர்வை ஏற்க மறுத்தனர்.

இதற்கிடையே, ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார் நடிகர் அர்ஜுன். அதோடு அவரது  மானேஜர் ஷிவ் அர்ஜுன், சைபர் கிரைம் போலீசில் நடிகை ஸ்ருதி மீது புகார் அளித்துள்ளார்.