“மீ டூ” புகார்கள்: அதிர்ச்சி அடைந்ததாக ஏ.ஆர்.ரகுமான் ட்விட்

மீ டூ விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மீ டூ (#MeToo) ஹேஷ்டேக்  மூலம் சமூகவலைதளங்களில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர்கள் ராதாரவி, சிம்பு, இயக்குநர் சுசிகணசன், இசைவல்லுநர்கள் டி.என். சேஷகோபாலன், சசிகிரண், ரவிகிரண், பிராமணர் சங்க தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகு மீ டூ பற்றி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவதுச

‘மீ டூ’ இயக்கத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிலரது பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  திரைத்துறையைப் பொறுத்த வரையில், நேர்மையாகவும், பெண்களை பெரிதும் மதிக்கும் துறையாகவும் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நானும் என்னுடைய குழுவினரும் எங்களுடன் பணிபுரியும் அனைவருக்கும் பாதுகாப்பான, நல்ல முறையில் பணிபுரிவதற்கான சூழலையே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குரலை எழுப்ப சமூக வலைதளங்கள் நல்ல வாய்ப்பையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், அது தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது.  அதற்காக   ஒரு இணைய நீதிமுறை கொண்டு வர வேண்டும்’’ என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.