மீ டூ என்பது  வெட்கட்கேடான விசயம்!: நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து

நெட்டிசன்:

மீ டூ என்பது வெட்கட்கேடானது என்று நடிகர் சிவக்குமார்   அவரது நண்பர் டி.பி. ஜெயராமன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொது விசயங்கள் பலவற்றில் அதிரடியாக தனது கருத்துக்களை நடிகர் சிவக்குமார் தெரிவித்து வருகிறார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பல மேடைகளிலும், செய்தியாளர் சந்திப்பிலும் முழங்கினார். நேற்றுகூட, “சபரி மலையில் விசேச நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆகவே சாதாரண நாட்களில் பெண்களை அனுமதிப்பதே சரி. இன்று நாம் பெண்களை அனுமதிக்காவிட்டால், இன்னும் சில வருடங்களில் அது நடக்கத்தான் போகிறது” என்று ஆணித்தரமாக தனது கருத்தைத் தெரிவித்தார்.

சிவக்குமாரின் கருத்தை வரவேற்று பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அவரது நண்பர் டி.பி.ஜெயராமன் முகநூலில் “மீ டூ குறித்து சிவக்குமார்ட என்ர தலைப்பில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

(தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டி.பி.ஜெயராமன், சிறந்த ஓவியரும்கூட. நடிகர் சிவக்குமார் சிறந்த ஓவியர் என்பது நமக்குத் தெரியும்.  இருவரும் ஓவியத்தின் மூலம் நீண்ட காலத்துக்கு முன்பே நண்பரானார்கள்.

இப்போதும் இருவரும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவது வழக்கம் என்று  டி.பி. ஜெயராமனே ஏற்கெனவே முகநூலில் பதிவிட்டுள்ளார்.

டி.பி. ஜெயராமன் பதிவு

டி.பி.ஜெயராமன் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“திரு சிவகுமார் என்னுடன் தொலைபேசி உரையாடலின்போது கூறியது…

“ஒரு ஆண் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் அது பெருங்குற்றம். அதனைக் குறித்து உடனடியாக புகார் கூறி அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து அவனை தண்டிக்க வேண்டும்.

ஒரு ஆண் ஒரு பெண்ணை தன்னுடன் டுத்துக் கொள்ள அழைத்தால் அதற்கு அந்தப் பெண் விருப்பமில்லயெனில் உடனே மறுத்துவிட வேண்டும். இது அவர்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட அந்தரங்க விஷயம்.

அதை அந்த பெண் பல வருடங்கள் கழித்து வெளியே கூறுவதும் செய்தியாளர்களிடம் பேட்டி அளிப்பதும் அதனைக் குறித்து மற்றவர்கள் விவாதித்துக் கொண்டிருப்பதும் வெட்கக் கேடான விஷயம்”. இவ்வாறு தன்னிடம் நடிகர் சிவக்குமார் கூறியதாக டி.பி.ஜெயராமன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இக்கருத்தை வரவேற்று பலரும் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள்.

“சிவக்குமார் சொன்னது சரியானது” என்று Manjini Manjini  என்பவர் பின்னூட்டம் இட்டுள்ளார். “அவர் சொல்வது சரியான கருத்து என்ருதான் நினைக்கிறேன்” என்று Janardhananpulikalaseri  என்பவர் பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படி பலரும் சிவக்குமார் கருத்தை ஆதரித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி