மீ டூ புகார்: மூத்த நிர்வாகியை நீக்கிய டாடா நிறுவனம்

பாலியல் குற்றச்சாட்டு காரணமாக, டாடா நிறுவனத்தின் ஆலோசகரும் மூத்த நிர்வாகியுமான சுஹல் சேத் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிரபல ஆலோசகரான சுகர் சேத், கோகோ கோலா மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தற்போது டாடா நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மீ டூ  விவகாரத்தில் இவரும் சிக்கினார்.

இவரின் மீது திரைப்படத் தயாரிப்பாளர் நடாஷா ரத்தோர் ( வயது 27) பாலியல் புகார் அளித்தார். ஏராளமான வாட்ஸ் அப் ஸ்க்ரீன்ஷாட்டுகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.

மேலும் பத்திரிகையாளர் மந்தாகினி கெலாட் என்பவரும் (வயது 33) 2011-ல் சேத் தனது உதட்டில் முத்தமிட்டார் என்று குற்ரம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து டாடா நிறுவனம் சேத் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

நவம்பர் மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று டாடா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். வேலையில் இருந்து நீக்குவதற்கு முன் ஒரு மாதம் அவகாசம் அளிப்பதை டாடா நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே பாலியல் புகார் காரணமாக கூகுள் நிறுவனத்தில் கடந்த இரு வருடங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டதாக அந்நிறுவனத்தன் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.